2009 ல் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இற்றைவரை கா.பொ.த (உயர் தர) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடம் தொடர்பான உசாத்துணை நூல்களை தமிழ் மொழியில் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கக் கூடிய இடர்பாட்டினை நிபர்த்திக்கும் முகமாகவே எனது சிறிய முயற்சியாகிய 'தரவுத்தள முறைமைகள்' எனும் இப்புத்தகமாகும். இந்தப் புத்தகமானது க.பொ.த (உயர் தர) த்தில் தகவல் தொடர்பாடல் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் கற்கின்ற மாணவர்களுக்கு தரவுத்தள முறைமைகள் அலகு தொடர்பான தெளிவான விளக்கத்தை வழங்கும் முகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பல்கலைக்கழகம், இலங்கை உயர் தொழிநுட்பக் கல்ல}ரி, தொழிநுட்பக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் தரவுத்தள முறைமையினை கற்கின்ற மாணவர்கள் தமது உசாத்துணை நூலகவும் இதனைப் பயன்படுத்த முடியும். இப்புத்தகமானது சுயகற்றல் மூலம் தரவுத்தள முறைமைகள் அலகை கற்பதற்கு ஏதுவான முறைமையில் அதிகமான உதாரணங்கள் மற்றும் விளக்கங்கள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன.
புத்தகத்தின் கட்டமைப்பு: க.பொ.த(உயர் தர) பாடத்திட்ட தேர்ச்சி மட்டங்களுக்கு ஏற்ப இப்புத்தகமானது ஏழு Chapter களைக் கொண்டுள்ளது அவை:
Chapter 01 - தேர்ச்சி மட்டம் 9.1
Chapter 02 - தேர்ச்சி மட்டம் 9.2 மற்றும் தேர்ச்சி மட்டம் 9.3
Chapter 03 - தேர்ச்சி மட்டம் 9.4
Chapter 04 - தேர்ச்சி மட்டம் 9.5
Chapter 05 - தேர்ச்சி மட்டம் 9.6
Chapter 06 - தேர்ச்சி மட்டம் 9.7
Chapter 07 - தேர்ச்சி மட்டம் 9.8 மற்றும் தேர்ச்சி மட்டம் 9.9 களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கல்வியமைச்சு, மற்றும் தேசிய கல்வி நிறுவகம் என்பவற்றினால் வெளியீடு செய்யப்பட்ட உசாத்துணை நூல்கள் மற்றும் ஆசிரியர் அறிவுரை வழிகாட்டி என்பனவும் அனுகப்பட்டிருக்கின்றன. Book is available in major book shops through out Island. If anybody need it please inbox me for details or call me 0773935290
0 கருத்துகள்