முற்றிலும் மாறுபட்ட வேற்றுக்கிரக நிலவமைப்பில் துருக்கியின் கிரேக்க உரோம புராதன நகரமாகிய கிராபொலிஸில் இயற்கையாகவே பாறையில் வடிவமைக்கப்பட்ட நீர்த்தடாகம் ஒன்று காணப்படுகின்றது. ஒரு மலையில் படிக்கட்டு போல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இதிலிருந்து வரக்கூடிய நீர் மருத்துவக் குணமுடையதாக நூற்றண்டு காலமாக நம்பப்படுகின்றது. UNESCO நிறுவனமானது உலக பாதுகாக்கப்பட்ட புராதன இடமாக பிரகடப்படுத்தியுள்ளதோடு அதன் பாதுகாப்பையும் பொறுப்பெடுத்துள்ளது.
துருக்கியில் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் கவரக் கூடிய ஒரு இடமாகவும் இது விளங்குகின்றது. கட்டணம் செலுத்தி விட்டு இதில் குளிக்கவிரும்புபவர்கள் நீராடலாம். எவ்வித நவீனமாக்கலுக்கும் உட்படுத்தப்படாது இயற்கையான தன்மையிலையே இன்றும் பேணப்படுவது இதன் முக்கியமான சிறப்பியல்பாகும்.
0 கருத்துகள்