header add

header add

கூகுளின் கண்ணுக்கான Smart Contact Lens

Google smart Contact lens
கூகுள்காரனுகளுக்கு புதுசு புதுச யோசிக்காட்டி தூக்கம் வராது போல ஏனென்றால் அடிக்கடி ஏதாவது புதிய தொழில்நுட்ப சாதனங்களை வியக்கத்தக்க வகையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
புதுசா Google Glass அறிமுகப்படுத்தி சந்தைக்குள் முழுமையாக விடல்ல அதற்கிடையில் Google Smart Contact Lensஐ அறிமுகப்படுத்திட்டார்கள். ஆனால் இது Google Glass ற்கு மாற்றிடாக இராது ஏனென்றால், இவ் Google Smart Contact Lens ல் Google Glass உள்ள வசதிகளை விட நீரிழிவு நோயாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகின்றது என நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகின்றது, அது எப்படியென்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களது குளுக்கோஸ் மட்டத்தை சீரான மட்டத்தில் பேணவேண்டியுள்ளது அகற்காக அவர்களது இரத்தத்தை பரிசோதிக்க வேண்டியுள்ளது ஆனால் இந்த செயற்பாடு எப்பொழுதும் சாத்தியமில்லை இவர்களை  அவர்களது கண்ணீரை கொண்டு தொடர்ச்சியாக சிறு வேதனையோ அசௌகரியமோ இல்லாமல்  குளுக்கோஸ் மட்டத்தை அளவிடுவதற்காக Smart Contact Lens இல்  சிறிய கம்பியில்லா சிறிய Chip ம் miniaturized glucose sensor ம் வைத்து தயார்செய்யப்பட்டுள்ளது.

நம்ம பயல்களுக்கு இகு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்