header add

header add

Apple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் 26 மில்லியன் ipad களையும் விற்று சாதனை

Apple CEO Tim Cook
என்னதான் ஆப்பிள் நிறுவனத்திற்கு Samsung, Nokia, Microsoft Motorola என பலத்த போட்டியிருந்தாலும் அது தன்பாட்டில் தன்விற்பனையை மெருகேற்றிக்கொண்டே தான் இருக்கின்றது. ஏனென்றால் 2012ல் 47.8 
மில்லியனாக இருந்த iPhone விற்பனை இந்த வருடம் 51 மில்லியனாக உயரந்திருக்கின்றது அதே நேரம் iPadகள் 22.9 மில்லியனிலிருந்து 26 மில்லியனாக உயரந்திருக்கின்றது  மேலும் Mac கணனிகள் 4.1 மில்லியனிலிருந்து 4.8 மில்லியனாக உயர்ந்திருக்கின்றது.
வருமானமும் $54.5 பில்லியனாக இருந்து $57.6 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது. இது இன்னொரு முக்கியமான விடயம் என்னெனறால் இந்த விற்பனை மற்றும் வருமான கணக்குகளில் உலகின் மிகப்பெரிய கம்பியல்லா தொடர்பாடல்  சேவையினை வழங்கும் China Mobile மூலம் விற்பனை செய்த iPhone, iPad வருமானக்க கணக்குகளை தனது கணக்கில் உள்ளடக்கவில்லை.

ஆப்பிள் CEO Cook விடம் இவ்வதிகரிப்பு சம்பந்தமாக கேட்டபோது அவர் சொன்னார் ”புதிய iPad Air மற்றும் retina displayயுடன் கூடிய iPad mini யின் அறிமுகமே காரணம் ” என்றார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்