header add

header add

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள் (3 Ways of Making Money Online)

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள்


இணையம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு ஊடகமாக இருக்கின்றது ஆனல் அதற்கு கடின உழைப்பும் பொறுமையும் தேவை. அதிகம் பேர் இணையத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க நினைத்து முட்டாளாகிய சந்தர்ப்பங்கள்தான் அதிகம். இலகுவாக யாரும்  பணம் சம்பாதிக்க முடியாது அதே நேரம் கடின உழைப்பு கைகொடுக்காமல் இருக்கவுமாட்டது. எனது முந்திய பிரசுரத்தில் (இணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்கள் (Few Advertisement Programs for Bloggers))இணையத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை பற்றி மாத்திரம் பார்த்தோம் இந்த பிரசுரத்தில் ஏனைய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

1.Blogging: பணம் சம்பாதிக்க மிகவும் இலகுவான வழிகளில் முதன்மையானது Blogging. உங்களாலு இலவசமாக blog ஐ blogger.com இல் உருவாக்க முடியும். அந்த blog ஐ அழகான முறையில் வடிவமைப்பு செய்யவேண்டும் அதேநேரம் SEO யினை சிறந்த முறையில் செய்யவேண்டும் மேலும் உங்கள் blog ஐ சிறந்த முறையில் சந்தைப்படுத்தி அதிகமான பவனையாளர்களை கவர வேண்டும். அதன் பிறகு Google adsense, affiliate marketing மற்றும் ஏனைய ads திட்டங்களான chitika, inforlinks, buysell ads ,etc போன்றவைகளின் மூலம் பணம் பார்க்க முடியும்.

2. Freelance Writing:  இணையத்தில் பணம் பார்கும் வழிமுறையளில் அடுத்த முக்கதியமான முறைதான் Freelance Writing. யாரெல்லாம் பத்திரிக்கையாளராக, பத்திரிக்கை ஆசிரியராக, பிரதிபண்ணி எழுதுபவராக, கட்டுரை எழுதுபவராக இருக்கின்றாறோ அவர்களுக்கு பொருத்தமானது. பாரிய புத்தக வெளியீட்டாளர்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் பிரபலமானவர்களிடம் எழுதக்கொடுத்து அதிகம் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக இவ்வாறான  Freelancer களை நாடிச்செல்கின்றுது. இவ்வாறான வேலைகளை இவ்விணையத்தளங்களி்ல் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்
FreelancewritingGetfreelancerDigital Point forum

3. Programmers: உங்களுக்கு C++, Java, .NET, PHP போன்றவற்றில் சிறந்த அறிவு இருக்கின்றதா? வீட்டிலிருந்து கொண்டு வேலை செய்ய ஆசைப்படுகின்றீர்களா? அப்பெடியென்றால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை ஏனென்றால் உங்களுக்காக Getfreelancer ல் நிறையவே வேலை காத்துக்கொண்டு இருக்கின்றது.

இன்னும் நிறையவே வழிகள் இருக்கின்றது அவற்றை அடுத்து வரும் பிரசுரங்களில் பார்ப்போம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்